POST: 2016-09-12T12:21:58+05:30

நேற்றைய உரைத் துளிகள்

வள்ளலார் நெறி
(1823 – 1874)

ஞானிகளாலும் துறவிகளாலும் புகழ் பூத்து விளங்கும் பொலிவுடையது இந்தியநாடு.இந்த வகையில் தமிழ்நாடு ஒப்பற்ற பெருமையுடையது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய வள்ளற்பெருமான், வடநாட்டில் இராமகிருஷ்ணா பரமஹம்சர் ,தயானந்த சரஸ்வதி முதலியோர் போல தோன்றினார்.

துறவிகள் எல்லாவற்றிலும் துறந்து வாழ்வது தான் இலக்கணமாகும்.

வள்ளல் பெருமான் துறவியாக இருந்த போதும் இந்த உலகத்தின் மீது பெரும் பரிவு பூண்டவர்.

ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செய்ய வேண்டும் என்று பாடியவர்.

அவர் பாடிய ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்களைப் பிழிந்தால் அருள்,அருள் என்று தான் சொட்டும்.

துறவிகள் தன்னுடைய ஈடேற்றத்தைப் பற்றித்தான் எண்ணித் தவம் இருப்பார்கள்.தன்னைப் பற்றிக் கருதாமல் வள்ளலார் வகுத்த நெறிகள் சமுதாய முன்னேற்றத்திற்கு உரியவை .

1.சாதி மதம் இல்லாத சீர்திருத்தம்
2.உயிர்ப் பலிகளைத் தடுத்த சீர்திருத்தம்
3.பொய் புரட்டுகளைப் புராண இதிகாசங்களை எதிர்த்த
சீர்திருத்தம் .
4.பெண்களுக்கும் சன்மார்க்கத்தில் இணையான உரிமை.
5.உருவமில்லாத கடவுளாக ஜோதியை வழிபடுதல் .
6.உள்ளம்,உயிர்,உடல்,என்ற மூன்றுக்குமாக சன்மார்க்க
சங்கம் ,ஞான சபை,சன்மார்க்க சாலை,என்ற மூன்று
நிறுவனங்களை உருவாக்கினார்.
7.திருக்குறள் வகுப்பு நடத்திய பெருமை.
8.ஏழை எளியவர்களுக்கு உணவிடுவதே அவருடைய
பெரிய இலட்சியமாக இருந்தது.அன்று சமையலுக்காக
ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை அணையவில்லை.
9. வள்ளலார் நெறி கருணையை வற்புறுத்தும் நெறி.
10. புத்தர்,ஏசுநாதர்,நபிகள் நாயகம்,போல இரக்கமும்
உருக்கமும் வடிவாக வாழ்ந்தவர் வள்ளலார் .
11. உயிர் இரக்கமே ஞானத்தின் திறவுகோல் என்பதே
அவர் கொள்கை .
12. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்ற
தொடர் ஒளிவழிபாட்டையும் ,கருணை ததும்பும் மன
இரக்கத்தையும் வளர்ப்பனவாகும்.

திரு.நீலகண்டன் உருக்கமாகவும் அழகாகவும் இந்த நூலை எழுதியுள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *