POST: 2016-09-15T17:27:19+05:30

சேரமான் கோக்கோதை மார்பனைச் சங்கப்புலவரான பொய்கையார் பாடிய பாடலில்
“நாடன் என்கோ ஊரன் என்கோ பாடிமிழ் பனிக் கடற்சேர்ப்பன் என்கோ! யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை“
என்று வியக்கிறார்.
அண்ணாவைப் பற்றியும் இப்படித்தான் சொல்ல வேண்டும்.
அவரை அரசியல்வாதி என்பதா,
சீர்திருத்தவாதி என்பதா,
பகுத்தறிவுவாதி என்பதா,
சிறுகதையாசிரியர் என்பதா,
நாவலாசிரியர் என்பதா,
நாடகாசிரியர் என்பதா,
நடிகர் என்பதா,
இதழாசிரியர் என்பதா,
இலக்கியவாணர் என்பதா
கட்டுரையாளர் என்பதா,
சிந்தனையாளர் என்பதா
பேச்சாளர் என்பதா,
ஆங்கிலப் புலவர் என்பதா,
வரலாற்றறிஞர் என்பதா,
பொருளாதாரப் பேராசிரியர் என்பதா?
எல்லாவற்றுக்கும் எல்லாமாகத் திகழ்கிறார்.
எனவேதான் பாவேந்தர் பாரதிதாசன் “
அண்ணாத்துரை எண்ணாத்துறை இல்லை“
எனக் குறித்தார்.

பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *