POST: 2016-10-24T06:23:57+05:30

பொய்க்கதைகள் புதைப்பட்டே இருக்காது !
======================================

இராம பஜனை நடத்திக் கொண்டிருக்கும் நமது நாட்டில் இராவணன் மாட்சியைப் பற்றி நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

தந்தை பெரியார் தன் தொண்டர்களின் பிள்ளைகளுக்குப் பெயரிட்ட போது இராவணன் என்று பெயரிட்டார். அப்போது பழித்து மவுண்ட் ரோட் மகாவிஷ்ணு, இப்போது மராட்டிய மாநிலத்தின் காண்டு (GOND) பாழங்குடி மக்கள் இராவண வழிபாடு நடத்துகிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது.

இலங்கையில் மக்கள் ஆர்பாட்டம் செய்து பிரதமர் மோடி அவர்களின் இராவணன் பழிப்புரையை எதிர்த்திருக்கிறார்கள். காலம் மாறுகிறது. கலகம் செய்த கற்றவர்களின் கொட்டம் அடங்குகிறது. வான்மீகி வாழ்த்தாததை துளசிதாசர்தான் இராவணனைப் பற்றி துடுக்காக எழுதியிருக்கிறார்.

வடக்கு – தெற்கு திசை மட்டுமல்ல. பண்பாட்டு எதிர்முறைகள் என்று உணரும் காலம் உருவாகி வருகிறது. பாவேந்தர் பாரதிதாசன்,

தென்திசையைப் பார்க்கின்றேன்;
என்சொல்வேன் என்றன்சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!

அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!

குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!

குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை!
என்தமிழர் பெருமான்
இராவணன் காண்!
அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

இராவணனை புகழ்ந்து போற்றி அறுபதாண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவ்வண்ணமே புலவர் குழந்தை இராவண காவியம் எழுதியும் ஐம்பதாண்டுகளுக்கு மேல் ஆகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *