இரங்கலுரை – 1
அம்மா என்று அழாதவர் இல்லை
==============================
எதிர்பாராமல் அரசியலுக்கு வந்து, எவரும் எதிர்பாராத எல்லையைத் தொட்டு, எவரும் எதிர்பாராத முடிவை அடைந்துவிட்டார். அவர் மறைவை இன்றும் நம்மால் நினைக்க முடியவில்லை. வனப்பு இழையோடிய அந்த வதன வட்டத்தை நாடு எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும்.
மகளிர் உலகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெறாமல் இருந்த முதன்மையை பெற்றுத் தந்த இவரை அம்மா என்று பலர் அழுது அரட்டியபோது எதிர்க்கட்சி தலைவர்கள் கண்களில் கூட ஈரமாயிற்று.
……. பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
இரங்கலுரை – 2
எதையும் உதறும் ஈடில்லா திறமை
=================================
நாடகம், திரைப்படம், நையாண்டி என்ற மூன்றும் கலந்து முடிசூடி நின்று இவைகளை உதறிவிட்டு அரசியற் சிந்தனையில் பெருந் தலைவர்களுக்கு கருத்துக்களைக் கூறிய அரசியல் வாணராகத் திகழ்ந்தவர் சோ.
பெயர்தான் துக்ளக். ஆனால், சிந்தனை முழுவதும் அரசியல் நுணுக்கம் தெரிந்த அரிஸ்டாடிலுக்கு வராத நகைச்சுவையை வாரித் தெளித்தவர் சோ.
துணிவு, நெஞ்சில் பட்டதை எடுத்துரைக்கும் நேர்மைத்திறம் இந்த அளவிற்கு வேறு எவரிடம் காணப் போகிறோம்?
……. பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

Add a Comment