இரங்கலுரை – 3
தமிழக்கு வாய்த்த அறிவியற் பெருங்கடல்
======================================
பொறியியல், அறிவியல் மேதை, தமிழியல் வித்தகர், எந்தக் கருத்தையும் தன் சொந்தச் சிந்தனையால் புதுமையாக எடுத்துச் சொன்ன குலோத்துங்கன் மறைவு தாங்க முடியாத கலத்கத்தைத் தருகிறது.
மாவட்டந்தோறும் பல்கலைக்கழங்களை உருவாக்கிய கல்விப் பெருங்கடல், ஆரவாரமில்லாத பகுத்தறிவுச் சிந்தனைகள் கட்டுரைகளில், கவிதைகளில் கருத்துரைகளில் ஈடில்லாமல் எடுத்துரைத்த வேந்தர்க்கு வா.செ.குழந்தைசாமியின் மறைவு அறிவுலகத்திற்கு தாங்கமுடியாத இழப்பாகும்.
நினைவில் வாழும் அருட்செல்வர் மகாலிங்கம் அவர்கள், பார்க்கும்பொழுதெல்லாம் அப்போதே கான்பூர்க்கு போகச் சொன்னேன். உலகப் பேரறிவாளனாக திகழ வேண்டிய வ.செ.கு. தமிழ் வளாகத்திலேயே சுற்றிச் சுழன்று வந்துவிட்டார்; அதனால் பேருலகம் அவர் பெருமையை முழுவதுமாக உண்ணரவில்லையே என்று பலமுறை கூறியிருக்கிறார்.
கடைசி நாட்களில் அவருடைய கவிதைத் தொகுப்பு நோபல் ஓரத்தை தொட முயன்று தவறிவிட்டது.
……. பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
இரங்கலுரை – 4
என் குலம் தழைக்க வந்த இன்குலாப்
=================================
ஆரவாரமில்லாமல், அடக்கமாக ஒதுங்கியிருந்த மாணவராகத்தான் என் நினைவுக்கு வருகிறார். எப்போது பார்த்தாலும் இவ்வளவு புரட்சியா ? என்று நான் கேட்ட பொழுதெல்லாம் உங்கள் பயிற்சி என்று நாணத்தோடு சொன்ன கவிஞர் இன்குலாப்பை என்னால் மறக்க முடியுமா ?
நீரிழிவால் சீர்குலைந்து வருந்தியதை கேட்டு கேட்டு நான் நெகிழாத நாள் இல்லை. இந்த வயதிலா இன்குலாப் மறைவது ?
……. பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

Add a Comment