POST: 2017-02-03T10:12:43+05:30

திரு.கிளமெண்ட் பெலிக்ஸ்
தலைமையாசிரியர்,
கிருத்துவ மேநிலைப்பள்ளி,
சேத்துப்பட்டு, சென்னை.

ஒப்பரிய கிளமெண்ட் பெலிக்ஸ் என்னும் உன்னதக்
கல்வியாளர் !
===============================================

என் வாழ்வில் எண்ணிமுடியாத ஆசிரியர்கள் பலரிடம் படித்திருக்கிறேன். நினைவில் நிற்பவரும், தன்னுடைய ஆங்கில மொழித்திறனாலும், அதிகப் பண்புகளினாலும் எப்போதும் நினைவில் நின்றவர் கிளமெண்ட் பெலிக்ஸ் ஆவார்.

அவருடைய நடை, உடை, அவருடைய தலைமைப் பண்பு இவை எப்போதும் நினைவில் நிற்பவை.

ஆங்கிலத்தை பாங்குற பேசுகிற திரு. பெலிக்ஸ் மறைந்தார் என்று கேட்டவுடனேயே எங்கள் மனங்கள் கலங்கின.

ஆங்கில உலகத்தின் தந்தை மேத்யூ அர்னால்டு என்ற தலைமை ஆசிரியரை எப்படி ஆங்கில உலகம் போற்றி பாராட்டியதோ அதுபோல தலைமேல் வைத்துக் கொண்டாடிய தலைமை ஆசிரியர் திரு. பெலிக்ஸ் அவர்களின் பிரிவினை அறிவுலகம் கண்டு தவிக்கிறது.

சிந்தையால், செயலால், சீர்த்தியால் எந்த நாளும் தன் வாழ்க்கையில் முன்னோடியாக இருந்த பண்புத்திலகம் திரு. பெலிக்ஸ்-ஐ எங்களால் மறக்க முடியாது. எங்கள் மனத்தில் பதிந்த திருவுருவம் பெலிக்ஸ்–ஐயும் அவருடைய துணைவியாரையும் நான் என்றும் நினைக்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *