எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-2
———
திருமதி.லதா இராஜேந்திரன் அவர்கள், புரட்சித்தலைவருடைய குடும்பத்தினுடைய உறவினர் என்பது மட்டுமல்லாமல், புரட்சித்தலைவருடைய புகழ் பாடுவதும் அவருடைய பெருமையை உலகெமெல்லாம் பரப்ப வேண்டும் என்ற கருத்தோடும் எளிய முறையில் தொடங்கிய இந்தக் கல்லூரி எவ்வளவு வலிமை வாய்ந்ததாக மாறியிருக்கிறது என்பதைக் காணும்போது திருமதி.லதா இராஜேந்திரன் அவர்களை நான் பாராட்டுகிறேன். அவருடைய உண்மையான உருக்கமும் அவருடைய உளப்பாங்கும் அவருடைய தன்னலமற்ற பணிகளும் சேர்ந்துதான் இந்த அருமையான கல்லூரிக்கு வடிவம் தந்திருக்கிறது.
இந்தக் கல்லூரிக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கின்றன. எவ்வளவோ சிறப்புகள் செய்ய வேண்டிய கடமைகள் அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் இன்றியமையாத பங்காக இருக்கிறது.

Add a Comment