எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-8
———–
சிலநேரங்களில் நம்முடைய மதிப்பு முழுவதையும், இன்னொருவருக்கு எதிரில் காட்டத் தவறி விடுவார்கள் பலர். கல்லூரிக்கு வரச் சம்மதம் தெரிவித்தார் எம்ஜிஆர், நாங்களும், மகிழ்ச்சியோடு திரும்பினோம். காலை பத்தரை மணியளவில், கல்லூரிக்கு வந்தார் எம்ஜிஆர். தஞ்சையே, அங்கு திரண்டிருந்தது. கூட்டத்தினரைப் பார்த்து, ‘நான் அரைமணிநேரம்தான் பேசுவேன்’ என்றார் புரட்சித்தலைவர்.
அவர் பேசத்தொடங்கி, அரைமணிநேரம் ஆனபின்பு, அவர் கையில் இருந்த கைக்கடிகாரத்தில் அலாரம் அடித்தது. அதுவே எங்களுக்கு, மிகப்பெரிய வியப்பு. காரணம், கைக்கடிகாரத்தின் அலாரம் அடிக்கும் ஒசையை, நாங்கள் அதுவரை கேட்டதேயில்லை. அதற்காகவே, தனியாகக் கைதட்டினார்கள். இதைப் பார்த்ததும், எம்ஜிஆர் சிரித்துக் கொண்டார்.
நண்பகல் ஒரு மணிவரை, அந்தக் கூட்டத்தில் பேசினார் எம்ஜிஆர். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார் எம்ஜிஆர். மாணவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவர்களுக்குக் கையெழுத்து இட்டுத் தந்தார். கல்லூரி முதல்வர் அருகில் இருக்கும் போதே, ‘நடராஜன் என்னோடு வந்துவிடுங்கள்’ என்று அவருடைய காரிலேயே அழைத்துக் கொண்டு போனார். அது என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சி!

Add a Comment