எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-9
———
அன்றிரவு ஒன்பது மணிக்கு, தஞ்சையில் பேசினார். பத்து மணிக்கு, விருந்து நிகழ்ச்சி நடந்தது, பெரும் கூட்டம் அங்குத் திரண்டிருந்தது. அவரைக் காண்பதற்காக, பெரும் நெரிசல் ஏற்பட்டது. அவருடன் இருந்த மகிழ்ச்சியான நினைவுகளை, என்னால் மறப்பதற்கில்லை.
நான் கதை, கவிதைகளில் ஆர்வம் கொண்டவன் என்று எம்.ஜி.ஆர். நினைத்துக் கொண்டார். என்னுடைய கதைப் பிரிவுக்கு எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்றுகூடச் சொன்னார். நான் சிரித்துக்கொண்டேன்.
மாணவர் பேரவை மட்டுமில்லாமல், உலகத்தமிழ்ப் பேரவையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். மேலவை கொறடாவாகப் பிற்காலத்தில் பணியாற்றிய இரா. ஜனார்த்தன மும், நானும் அடிக்கடி சத்தியா ஸ்டுடியோவுக்குப் போவோம். அவர் என் நெருங்கிய நண்பர். இது எம்ஜிஆருக்கு, நன்றாகத் தெரியும். அதன்பின், செய்தித்துறை மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் நான் பணியாற்றத் தொடங்கியதும், எம்ஜிஆருக்குத் தெரியும்.

Add a Comment