எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-10
———
எம்ஜிஆர் முதல்வராகப் பதவியேற்றதும் நடைபெற்ற அலுவலர்களின் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, நான் ஆர்வத்தோடு சென்றேன். எல்லோரும் வரிசையாக நின்று, பொன்னாடையும் மாலையும் அணிவித்தார்கள். என்னுடைய முறைவந்த போது, இரண்டுகை களையும் குவித்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். ‘அண்ணா, நான் இங்குதான் இருக்கிறேன்’ என்றேன்.
உடனே அவர் என் காதைப்பிடித்து, “இங்குதான் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாதா’ என்று சொன்னார். அங்கிருந்த யாரிடமும், அவர் இவ்வாறு பேசவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பே வரவில்லை. இரண்டு, மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதுகூட, அவரது வழக்கமான, பரிவான பார்வை, என்மீது விழவில்லை.

Add a Comment