POST: 2017-04-11T11:35:32+05:30

தமிழுலகம் தவித்துப் புலம்புகிறது
===============================

அருமை பேராசிரியர் அறிவுநம்பியின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அறுபதை தாண்டிய பிறகும் இருபது வயது எழுச்சியுடனும் இளமைத்திறமையுடனும் திகழ்ந்தவர் பேராசிரியர் அறிவுநம்பி.

அடக்கமும் ஆற்றலும் அவரை ஆன்றவிந்தடங்கிய சான்றோராகவே கண்டு மகிழ்ந்தது.

இப்படிப்பட்டவருக்கா இப்படி திடுக்கிடும் மாரடைப்பு நேர்ந்தது?.

தலைமுறை தலைமுறையாக தமிழ் வளர்த்த தனிப்பெரும் மரபின் புகழோடு தனது புகழையும் ஓங்கி வளரச்செய்த அறிவு நம்பியை என்னால் மறக்கவே முடியாது. அறிவுநம்பி என் கண்ணெதிரிலியே நிற்பது போல எண்ணி கலங்குகிறேன்.

—– பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *