எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-13
———
‘நான் இங்குப் பதவியேற்று, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. வந்து பார்க்கும் வழக்கம் கிடையாதா? உங்க மேல, எனக்கு ரொம்ப கோபம்’ என்றார். ‘முதலமைச்சரைப் பார்த்து பேசுவது, அவ்வளவு எளிதானதா’ என்று கேட்டேன்.
“என்னை வந்து சந்திக்கலைன்னு கோபம் என்று திரும்பவும் சொன்னார். பிறகு மறுநாள் காலையில் வந்து பார்க்கச் சொன்னார். நான் போனேன். ‘ஒரு வேலையும் இல்லை. எதற்கு வரச் சொன்னேன் என்று தெரியுமா? இன்று நீ என்னோடு சாப்பிட்டு விட்டுப்போ’ என்றார். சாப்பிட்டபின்பு, நான் திரும்பிவிட்டேன். இவ்வாறு அவர் பலமுறை பரிவு காட்டிய நினைவுகள், வந்து வந்து வசந்தத்தைத் தெளிக்கின்றன.

Add a Comment