POST: 2017-04-19T08:30:22+05:30

திருமதி.புனிதவதி இளங்கோவன்
===============================

புனிதவதியார் இளங்கோவன் மறைந்த செய்தி அவலம் தருகிறது. பேராசிரியர் இளங்கோவன் மறைவிற்குப்பின் வாழ்வாங்கு வாழ்ந்து தன் ஓயாக் கடமைகளுக்கு நடுவில் தம் மக்கட் செல்வங்களை மாண்புடையவர்களாக மாற்றியதே அம்மையாரின் தாய்மைக்கு அளவிலாத பெருமையை வாய்க்கச் செய்தது.

முதிர்ந்த வயதில் இயற்கை தன் முடிவை நிறைவு செய்கிறது. ஈடில்லா பேராசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் ஒப்பற்ற குடும்பத்திற்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்து வழிகாட்டினார். மக்கட் செல்வங்கள் தாயின் நினைவைப் போற்றி கலையுலகத்தில் தலை சிறந்து புகழ்ப் பெறுவதை எதிநோக்கி காத்திருக்கிறேன்.

அன்னையாரின் பிரிவு அவலத்தில் எங்கள் குடும்பம் பங்கேற்கிறது.

ஆறுதல் பெறுக.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *