POST: 2017-04-22T18:00:54+05:30

55 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி கதிரில் ஒளைவைப் பற்றி வெளிவந்த செய்திக் கரும்பு
===========================================
எனது பிரயாண அனுபவம் – 1
===========================

இவ்வளவு முதியவராக இருக்கலாமா ?
====================================

தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் மொழி பெயர்ப்புத் துறையின் இயக்குநராகப் பணியாற்றி வரும் திரு. ஔவை நடராஜனை தமிழ் கூறும் நல்லுலகில் பலர் ஒரு பேச்சாளர் என்றே அறிவர். மகளிர் கல்லூரிக் கூட்டங்களுக்கு இவர் குமரி அனந்தனுடன் சொற்பொழிவாற்றச் சென்றால், “அவ்வையும். குமரியும் பேச வந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிடுவது வழக்கம். இவரது தகப்பஞர் பேராசிரியர் அவ்வை துரைசாமியும் சிறந்த பேச்சாளர். அதுவே பல சந்தர்ப்பங்களில் குழப்பத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது” என்று கூறும் திரு. ஔவை நடராஜன் குறிப்பிடும் சில சுவையான நிகழ்ச்சிகள்:

1961- ம் ஆண்டு தூத்துக்குடி செந்தமிழ்ச் சிவநெறி மன்றத்தினர் என் தந்தையின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் கடிதம் எனக்கு எழுதி அழைத்தனர். நான் தூத்துக்குடி சென்றதும் என் தந்தையாரை எதிர்பார்த்த அவர்களுக்கு என்னைப் பார்த்ததும் வியப்பாக இருந்தது. நான் சொற்பொழிவாற்றிவிட்டுத் திரும்பினேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *