POST: 2017-04-24T10:47:37+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-16
————-

இதில் பெரிய வியப்பு. உடனே முதலமைச்சரிடத்தில் இருந்து அழைப்பு. தலைமைச்செயலாளர் என்னையும் அழைத்துக் கொண்டு போனார். முதலமைச்சர் எம்ஜிஆர் உட்கார்ந்துகொண்டு, உலகத்தமிழ் மாநாட்டிற்கான நிகழ்ச்சிநிரலைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வழக்கம்போல், அவரது பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். ஆறுமணி என்று நிகழ்ச்சி நிரலில் இருந்ததைப் பார்த்துவிட்டார் எம்ஜிஆர். என்னைப் பார்த்து திரும்பி, “நீங்கள் பெரிய பகுத்தறிவுவாதியோ?” என்று கேட்டார்.

“ஆறுமணி வரை ராகுகாலம். இதைப் பார்க்கும் ஊரார் என்ன நினைப்பார்கள் இதை ஆறரை மணி என்று திருத்துங்கள்’ என்று சொல்லிவிட்டு, என் முதுகில் டக்கென்று கையால் தட்டினார். தெரியாமல் போட்டுவிட்டேன் அண்ணா! நான்தான் ஆறு மணி என்று எழுதினேன் என்று சொன்னேன். எதிரே இருந்த தலைமைச் செயலாளர், ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. அதைப்பார்த்து, நான்தான் சிரித்தேன். யாருக்கு, யாரைப்பற்றி, எவ்வளவு நன்றாகத் தெரிகிறது என்பதைப் பல நேரங்களில், பலர் தெரிந்துகொள்ளாமல் போகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *