POST: 2017-05-01T11:35:12+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-23
————-

அப்போது உடன் இருந்து, தன் கைப்பட அந்தக் கடிதத்தை எழுதியவர் ஜெகத்ரட்சகன். என்னுடைய உடன்பிறந்த சகோதரர் போன்றவர். நாங்கள் சென்றபோது, ஏதோ ஒரு அலுவல் காரணத்தினால், மறுநாள் வரச்சொன்னார் எம்ஜிஆர். அதன்பின் நான் போகவில்லை. ஆனால் பாருங்கள் அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு, அமைச்சர் ராசாராம் மற்றும் ஆர்.எம். விரப்பனைச் சந்தித்துக் கொடுத்தார் ஜெகத்ரட்சகன்.

எப்படியோ, அந்தக் கடிதம் முதலமைச்சருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. நான்கு நாட்களுக்குள் ஒரு முடிவு சொல்கிறேன் என்று அதனைப் பார்த்து விட்டுச் சொன்னார் எம்ஜிஆர். சொன்னால் நம்பமாட்டீர்கள்! நான்கு நாட்கள் கழித்து, காலை பத்து மணிக்கு, எம்ஜிஆரே என்னிடம் தொலைபேசியில் பேசினார். ‘அரசுச் செயலாளர் இருக்கிறாரா’ என்று கேட்டார். ‘என்ன அண்ணா!’ என்று கேட்டேன் நான். ‘உங்களைச் செயலாளராகப் போட்டு விட்டேன். உடனே புறப்பட்டு வாருங்கள் என்றார் எம்ஜிஆர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *