எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-34
————-
எந்த விதமான ஐயமும் இல்லாமல், விழிப் போடும் தெளிவோடும், எல்லாக் கணக்குகளும் தீர்வாகி விட்டன என்ற தெளிவு நிலையில், நீங்கள் முற்படுவீர்களானால், வானம் கூட உங்களுக்குத் தொடும் தூரம்தான் என்று ஆங்கிலத்தில் சொன்னேன். திரும்பச் சொல்லுங்கள் என்று அந்த விண்வெளிவீரர்கள் கேட்டார்கள். என் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் எந்த மேத்தமெட்டிஷியனை கோட் பண்ணுகிறீர்கள் என்று ܂நான் ‘கணக்கறிஞன் இல்லை. தமிழகத்தில் அறிவுப் பேரொளியாகத் திகழ்கிற திருக்குறளில் இருந்து, இதனைச் சொன்னேன். அந்த நூல்தான், உங்களுக்குப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது’ என்றேன்.
நாங்கள் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும்முன்பு, கருத்தைத்தான் சொன்னார்கள் என்று அந்த விண்வெளி வீரர்கள், அருகில் இருந்த முதலமைச்சர் எம்ஜிஆரிடம் கூறினர். முதலமைச்சருக்கு, கண்களில் நீர் மல்க, உருகிவிட்டார். இரவு பதினொரு மணிக்கு, எனக்கு போன் செய்தார் எம்ஜிஆர். எவ்வளவு பொருத்தமான திருக்குறள்? இதைத்தான் எங்களுக்கு சொன்னார்கள் என்கிறாரே என்று சொல்லி, மறுநாள் என்னோடு சிற்றுண்டி சாப்பிடுங்கள் என்றார் எம்ஜிஆர். சிலநேரங்களில் திருக்குறள் உருக்கம் அல்லது இலக்கியக் காட்சிகளைக் கேட்கிறபோது ஒரு பரிவு, எம்ஜிஆரிடத்தில் வரும். அந்த அடிப்படையில், நான் சொன்னதன் விளைவாக, திருக்குறள் நெறிபரப்பு இயக்கம் என்ற அமைப்பை, வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கினார் முதலமைச்சர் எம்ஜிஆர். திருக்குறளாரை அதற்குத் தலைவராக அமர்த்தினார் அவர்.

Add a Comment