POST: 2017-05-15T10:50:35+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-36
————-
முதல்வர் அவ்வாறு அறிவிக்கலாம். ஆனால் அயல்நாட்டில் வாழ்கின்ற ஒரு தலைவருக்கு, அவ்வாறு வழங்குவதற்கு விதி இடம்தருமா? என்று தெரியவில்லை. நீங்கள்தான் அதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று சொன்னேன் நான் மைய அரசிடம் வினவத்தான் வேண்டும் என்றார்.

என் மனம் அப்படிச் சொல்கிறது என்று சொன்னார். பாருங்கள்! மீண்டும் அதைப்பற்றி, என்னிடம் அவர் பேசவில்லை. பின்னர், அதைப் பற்றிய அறிவிப்பும் வரவில்லை. அவருடைய மனம் பொங்கியது. உடனே என்னிடம் கூறிவிட்டார். அவ்வளவுதான்!

அவருக்கு மற்றவர்களிடம் எவ்வளவு மதிப்பிருந்தது என்று சொல்ல வேண்டும். நான் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறையின் செயலாளராக இருந்த போது, இசைக்கல்லூரி என் பொறுப்பில் இருந்தது. அந்த இசைக்கல்லூரியின் முதல்வராக, திரைப் படங்களில் புகழ் வாய்ந்திருந்த, நடிகை பானுமதி அமர்த்தப் பட்டிருந்தார். அதற்கடுத்த நிலையான இயக்குநர் பொறுப்பில், இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் இருந்தார். அவருடை தமிழ்ப் பற்றும், தமிழ்ப் பாடலும் புகழும் நாடறிந்தது. வயதாகி, உடல் தளர்ந்ததனால், நிலைதடுமாறி, சில சமயங்களில் அவர் பேசுவார். அதைப் பார்த்து, அவரை எப்படியாவது பொறுப்பி லிருந்து நீக்க வேண்டும் என்று முயன்று, இந்த அம்மையார் சொன்னதால், உடனே எடுத்துவிட்டார்கள். நான் எவ்வளவோ சொன்னேன். இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் மீது, எனக்கு அளப்பரிய ஆர்வம். ஏன் இதனை குறிப்பிடுகிறேன் என்பதற்குக் காரணம் உண்டு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *