எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-39
————-
மாமன்னன் இராசராசனுக்கு ஆயிரம் ஆண்டு முடிசூட்டு விழா என்று, தஞ்சையில் மகத்தான விழா நடந்தது. அதற்குத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி அம்மையார் வந்திருந்தார். அந்த விழாவை மேற்பார்வையிடுவதற்காக, அப்போதைய முதற்செயலாளர் பத்மநாபன் வந்திருந்தார். என்னிடம் மிகுந்த அன்பாகப் பழகினார் பத்மநாபன்.
இந்திராகாந்தி அம்மையார் சொற்பொழிவாற்றும்போது, யார் மொழிபெயர்ப்பது என்று யோசித்து, என்னை அழைத்தார். நான் மொழிபெயர்த்து, அம்மையாரின் பேச்சு முடிந்தது. இந்திராகாந்தி அம்மையார் விடுவிடுவென்று கீழிறங்கி விட்டார். முதலமைச்சர் சட்டென்று நின்றுவிட்டார். நீங்கள் வரவில்லையா? என்று முதலமைச்சரைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார் இந்திராகாந்தி.
இல்லை. நான் பின்னால் தொடர்ந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அவர் மெல்ல மெல்லக் காலெடுத்து வைத்து நடந்தார் எம்ஜிஆர். அதுபோல, அவர் இறங்கமாட்டார். மற்றவர்கள் பார்க்கும்போது, அவர் கிடுகிடுவென்றுதான் நடப்பார், நாங்களும், அன்று அவர் பின்னால் போனோம்.

Add a Comment