POST: 2017-05-22T10:56:40+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-41
————-

மொழிபெயர்ப்புத்துறை, அவ்வை நடராஜன் துறைதானே! என்று நம்பியவர்கள் பலர் உண்டு. அதனை வாய்ப்பாகக் கொண்டு, பல கதைகள் கட்டியவர்களும் உண்டு. அத்தனை வாயிலும், மண் விழுமாறு செய்து, முதல்வர் நடந்து கொண்டதை, நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அதற்கு, அடுத்த ஆண்டே, உலகத் தமிழ் மாநாட்டில் மிகப்பெரிய வாய்ப்பு தந்து, என்னைப் போற்றியதை, ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதேபோல, அவர் மறைவதற்கு, ஓராண்டுக்கு முன்னால், என்னைப் பதவியில் இருந்து அகற்றியபோது, எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லி யிருக்கிறேன். அப்போது, அவர் எந்தளவிற்கு, நிலைகுலைந்து போயிருந்தார் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *