POST: 2017-05-26T10:38:48+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-43
————-

போக்குவரத்துத் துறையின் தலைவராக இருந்த திரு.எஸ்.டி.காசிராஜனை, தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையில் அமர்த்தினார்கள். ஆனால், அவருக்கு மகிழ்ச்சி இல்லை. காரணம், போக்குவரத்துத்துறைதான், அதிகம் போக்குவரத்து உள்ள துறை. அது மட்டுமில்லாமல், அரசுச் செயலாளராக, அவரை அமர்த்த முடியாது. அவர், அந்த அளவுகோலில் வருபவர் இல்லை. இணைச் செயலாளர் என்ற தகுதியில் பணியாற்றியிருக்கிறார். இந்த தகவல்கள் எதுவும், எனக்குத் தெரியாது.

பிறகு ஒருமுறை, தலைமைச் செயலாளராக இருந்த, பின்னாளில் ஒரிஸா மாநில ஆளுநராக இருந்த, திரு.எம்.இராஜேந்திரன், இதனைக் கவனித்திருக்கிறார். இப்படி முட்டாள்தனமாக, அவரை நியமித்து. செயலாளர்கள் கூட்டத்தில், உங்களைப் போல, அவர் கலந்துகொள்ளவே முடியாது என்று சொன்னார். அது வேறு கதை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *