POST: 2017-05-27T14:02:56+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-44
————-

எம்.ஜி.ஆர். இவ்வளவு நிலைகுலைந்து விட்டாரே என்று, நான் வருத்தப்பட்டேன். இரு திங்கள் கழித்து, தலைமைச் செயலாளராக இருந்த, பண்பின் திலகம் பத்மநாபன், ஒரு நியமன ஆணையை வெளியிட்டார். உலகத் தமிழ்ச்சங்கத்தின் அமைப்பாளர் என்ற பதவியில், அரசுச் செயலாளர் தரத்தில் இயங்குவார் என்று, ஆணை வெளியிட்டார். மதுரையில் பணிகள் நடைபெற்றாலும், சென்னைத் தலைமைச் செயலகத்தில், அவர் இருந்த அறையிலேயே, அந்தப் பணிகளைத் தொடரலாம் என்றும், அந்த ஆணையில் கூறியிருந்தார். அதனை, மிக நன்றியோடு, நான் நினைக்க வேண்டும்.

அதன்பின், ஒர் அரங்கத்தில், முதலமைச்சரைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இங்கே வாருங்கள் என்று சொன்னார். என் தோள்களைத் தொட்டு, எப்போதும்போல, அவர் பேசினார். என்ன அண்ணா இப்படி நடந்து விட்டதே! என்றேன். என்ன நடந்தது என்று கேட்டார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *