POST: 2017-05-28T15:45:36+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-45
————-

அவரது காதில், நாம் சொல்ல வேண்டிய நிலைமை. அது, அவருக்கு விளங்கவில்லை. என்னை மாற்றியிருக்கிறார்கள். உங்களைப் பார்த்துக் கேட்கலாம் என்று வந்தேன். ஆனால், உங்களைப் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். அதற்குப் பிறகு, அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? வாரியத்தலைவர் பதவிதானே, நான் உங்களுக்குத் தந்தேன். அந்தப் பதவி, மூன்றாண்டுகள் தானே! என்று சொன்னார் எம்.ஜி.ஆர்.

நான் ஒரு அரசுப் பணியாளன், எனக்கும், எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், என்னைப் பற்றி, ஏதோ சொல்லியிருக்கிறார்கள் என்று புரிந்தது. தொடர்ந்து, அவரால் பேச முடியவில்லை. சரி அண்ணா என்று, நான் கிளம்பிவிட்டேன். ஆனால், அவரது பார்வையில், பழைய கனிவு இருந்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *