POST: 2017-06-05T10:53:02+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
=================================================

பகுதி-51
————-

எல்லாவற்றையும் ஆழ்ந்து காண வேண்டும். கணக்காகச் செய்ய வேண்டும். எதிலும் தன் தூய்மைக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என்பதில், உறுதியாக இருந்தவர். அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது, இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைக்கும் சிறந்தவர்களை அழைக்க வேண்டும். உலகத் தமிழ்ச்சங்க தொடக்கவிழாவில், அந்த விருதுகளை வழங்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

ஓர் அமைச்சர்தான், இந்த தகவலை என்னிடத்தில் சொன்னார். அதற்கென்ன? என்று மூன்று பெயர்களை எழுதி முதல் அமைச்சர் புரட்சித்தலைவரிடம் எடுத்துப் போனேன். அப்போது அவருக்கு நெருக்கமாக இருந்த அமைச்சரிடத்தில், இதுபற்றிக் கேட்டேன். இயல் என்று சொன்னால் கிருபானந்த வாரியாருக்கும், இசை என்று சொன்னால் எம்.எஸ்.சுப்புலட்சமிக்கும், நாடகம் என்று சொன்னால் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும் வழங்கலாம். இந்தப் பெயர்களை, நீங்கள் பரித்துரைக்கலாம் என்று நினைக்கிறார்கள் என்றார் அந்த நபர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *