மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-53
————-
அவர்கள் சொன்னது, எனக்குப் பொருத்தமானதாகத் தோன்றியது. அமைச்சர் ஆர். எம். வீயை அணுகவேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தப்படவில்லை. நான் அனுப்பிய மறுநாளே, அந்தக் கோப்பு திரும்பி வந்து விட்டது. அதில், ஒருவிதமான கருத்தும் சொல்லப்படவில்லை.
அதற்கென்ன பொருள் என்று புரட்சித்தலைவரின் கருத்தறிய, நானே போனேன். ‘நீங்கள் அமைச்சர் ஆர். எம். வீயைப் போய்ப் பாருங்கள்’ என்று சொன்னார் எம்ஜிஆர்.
அமைச்சர் ஆர்.எம். , ‘இந்த மூன்று பெயர்களையும் சொன்னது யார்?’ என்றார். இன்னொரு அமைச்சர் தான் சொன்னார் என்றேன். ‘எனக்கு அது பொருத்தமாகப் படவில்லை. வாரியாருக்குச் சிறப்பு செய்யுங்கள். நம்முடைய முதலமைச்சருக்கும், பெரிய பரிசு தாருங்கள். நாடகத்துறைக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். 300 பவுன் எடைக்கு, பொன்னால் தாமரைப்பூ செய்து, தங்கத்தாமரையாகக் கொடுக்கலாம்’ என்று கருத்து சொன்னார்.
நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், அதுபற்றிப் பத்து வரிகள் எழுதினார். ‘வாரியார் பேசும்போது இயலாகவும், கதை சொல்லும்போது இசையாகவும், மேடையில் நிற்கும்போது நாடகமாகவும் இருப்பதனால், வாரியாருக்கு வழங்கலாம்” என்று எழுதினார். அது எவ்வளவு தெளிவான குறிப்பு என்று பாருங்கள்.

Add a Comment