மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-54
————-
யார் மனமும் புண்படாமல், இசை, நாடகத்தை அப்படியே தள்ளிவிட்டு, அதன்பிறகு, அந்த விருது வாரியாருக்கு வழங்கப் பட்டது.
புரட்சித்தலைவருக்குப் பெரிய பாராட்டுவிழா நடத்தி, அந்நாளில் தங்கத்தாமரை வழங்கினோம். குறிப்பின் குறிப்புணர்வாரை என்று சொல்வது போல, புரட்சித்தலைவரின் குறிப்பறிந்து நடப்பதில், ஆர்.எம்.வீ.க்கு நிகராக, யாரையும் சொல்ல முடியாது.
பல ஆண்டுகள் கழித்து, நானும் பல நிலைகளைத் தாண்டி வந்தேன். அமைச்சர் என்பதால் மட்டும், அவருக்குத் தமிழ்ப்பற்று வரவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, இராயப்பேட்டையில் திருவள்ளுவர் கழகம் என்பதை நடத்தினார். அவரிடம் கனி எவ்வளவு உண்டோ, அந்த அளவிற்குக் கண்டிப்பும் உண்டு ஆனால், தெளிவான முடிவெடுப்பதில் தேர்ந்தவராக, ஆர்.எம்.வீ. அவர்கள், அருளாளராகவும், பண்பாளராகவும், வள்ளலாகவும் செம்மாந்த வாழ்க்கை நடத்திச் சிறந்து
விளங்குகிறார்.

Add a Comment