மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-56
————-
தேர்தல் வந்த நேரம், தேர்தலுக்குச் சீட் கேட்கலாமா? என்று, ஒருமுறை என்னிடம் கேட்டார் ஜெகத்ரட்சகன். நன்காகக் கேள்! எந்த ஊரில், நமக்கு வாய்ப்பு இருக்கிறது என்று யாருக்குத் தெரியும் என்றேன் நான். நண்பர்கள் ஆர்வத்துடன் பணம் கொடுத்து, டெபாசிட் பணம் கட்டச் செய்தார்கள். அவரும் கட்டினார். இதற்கு முன் ஒருமுறை, இதுபோலச் செய்தார் ஜெகத்ரட்சகன். அப்போது, அவருக்குக் கிடைக்காமல் போய்விட்டது.
ஒருநாள் மேட்னிஷோ சினிமா பார்க்கலாம் என்று, நாங்கள் இருவரும் போனோம். சினிமா பார்த்துவிட்டு, வெளியே வந்தோம். கலைவாணர் அரங்கத்திற்கு எதிரில், ஒரு கடையில், மாலைமுரசு வந்திருந்தது. நான்கூடச் சொன்னேன். மாலைமுரசு வாங்கிப் பார்க்கலாமா? என்றேன். வேணாம் அண்ணா! நம் பெயர், தேர்தல் பட்டியலில் வராது என்று சொன்னார் அவர். அன்று, நாங்கள் மாலைமுரசு வாங்கவில்லை.

Add a Comment