POST: 2017-06-16T11:49:35+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-59
————-

அடையாளம் தெரியாத இளம் மாணவர்கள் என்ற நிலையில், ஜெகத்ரட்சகனைப் பெரிதும் போற்றினார் புரட்சித்தலைவர். ஒருமுறை, ஐந்து லட்ச ரூபாய் பணத்தை, ஒரு பையில் இட்டு, அதைக் கொண்டுபோய், ஆயிரம் விளக்குப் பகுதியில், ஒருவரிடத்தில் தந்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பினார். தெரியாத, இளம் பையனிடத்தில், அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தனுப்பினார் எம்.ஜி.ஆர்.

வேறு வழியில்லாமல், தோட்டத்திலிருந்து ஏறத்தாது 15 கிலோமீட்டர் நடந்து சென்று, அந்தப் பையைத் தந்துவிட்டு, திரும்பிப்போய் எம்.ஜி.ஆரிடம் தகவல் சொன்னவர் ஜெகத்ரட்சகன். அதை எப்போதும் உருக்கமாகச் சொல்வார் புரட்சித்தலைவர். உத்திரமேரூர் தொகுதியை ஜெகத்ரட்சகனுக்குத் தந்தபோது, அந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டினார்.

கட்சியில் பணியாற்றிச் சட்டமன்ற உறுப்பினராக வருகிற நிலையில், ஆர்.எம்.வீ.யோடு நெருக்கமாகப் பழகுகிற வாய்ப்பு, ஜெகத்ரட்சகனுக்குக் கிடைத்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *