மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-60
————-
மாலை வந்தால், எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தமிழ் அறிஞர்களைக் கண்டால் தனி மகிழ்ச்சியும்,
திரைப்படங்களைச் சென்று காண்பதில் மிகுந்த விருப்பமும் உடையவராக இருந்தவர் அமைச்சர் இராசாராம்.
அவர் புது தில்லியில் திருவள்ளுவர் சிலை நிறுவியிருந்தார். அதைப் பெரும் விழாவாக நடத்தினார். தில்லியில் நடந்த அந்த விழாவை ஒழுங்கு செய்ய வேண்டிய பெரிய பொறுப்பை என்னிடம் தந்திருந்தார்.
திருவள்ளுவர் மீது, அவர் கொண்ட காதலுக்கு அது ஒரு சான்று. குடியரசுத்தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது வந்திருந்தார். விழா சீரும் சிறப்புமாக நடந்தது.
அமைச்சர் பதவியில் இல்லாதபோதும், என்னைப் பெயர் சொல்லி அழைத்துப் பரிவு காட்டுவதில் சிறந்து விளங்கிய பண்பாளர் திரு.இராசாராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment