POST: 2017-06-19T10:39:53+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-62
————-

“பேரன்பு கொண்டோரே!” பெரியோரே! என்னைப் பெற்ற தாய்மாரே!” என்ற புரட்சிக்கவிஞரின் பாடலில் ஏழெட்டு விருத்தங்களைச் சொல்லியிருக்கிறேன். நாவலர் நெடுஞ்செழியனின் பேச்சு, உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரது பேச்சை முடிக்கும்போது, “பூட்டிய இரும்புக் கூண்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே, வெளியில் வா!” என்ற பாரதிதாசன் கவிதையில் நாற்பது வரிகளை, எழுச்சி பொங்கச் சொல்வார்.

அதேபோல, தமிழ் மக்களுக்கு எழுச்சி உண்டாக்க வேண்டும் என்பதற்காக, “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு! தென்னாட்டு மக்கள் வீராதி வீரர் என்று ஊது ஊது சங்கே!” என்று பேசுவார் நாவலர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *