மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-64
————-
கல்லூரியில் பயின்ற போது, எனக்குச் சுரதாவின் பாடல்களில் பெரிய மயக்கம் இருந்தது. அவருடைய பாடல்வரிகள் பலவற்றை, நான் தொடர்ந்து சொல்வேன். அந்தக் கவிதைகள், காளிமுத்துவுக்கு நன்றாகத் தெரியும். அவர் அதுபோல, பல கதைகள், கவிதைகளைச் சொல்வார்.
‘வாழ்க்கை இல்லறத்தில் தொடங்குகிறது. வாழ்க்கைத் துணைநலத்தோடு இணைகிறது. மக்கட்பேறில் நிறைகிறது’ என்று சொல்லி, புகழ் வரையிலும் திருக்குறள் அதிகாரங்களை ஒருங்கே தொகுத்துச் சொல்லுவேன். அதன்பிறகு, என் பேச்சுநடை, வேறு பல மாற்றங்களைப் பெற்றது.
நண்பர் காளிமுத்து, இதேபோலத் தொடர்நடைகளைச் சொல்வதைக் கேட்டு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெரிய வியப்படைந்தார்.

Add a Comment