மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-66
————-
தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அமைச்சர் காளிமுத்து பேசினார். ‘முன்பெல்லாம், ஆசிரியர்களை ஏணி என்றும், தோணி என்றும் சொல்வார்கள். ஏணி, பிறரை ஏற்றுவிக்கும். ஆனால், இருந்த இடத்திலேயே நிற்கும். தோணி, ஆற்றைக் கடக்க உதவும் ஆனால், ஆற்றிலேயே தான் கிடக்கும் என்றுதான் ஆசிரியரைச் சொல்வார்கள்.
ஆனால் பாருங்கள் எனக்கு வாய்ந்த ஆசிரியர் அப்படியல்ல. அவர் ஏணிதான்! சாதாரண ஏணி அல்ல. மின்சார ஏணி. நான் மின்சார ஏணி என்று லிப்டைச் சொல்கிறேன். ஏனென்றால், லிப்டில் நாம் போய் நின்றால், நம்மோடு அனைவரும் வருவார்கள்.
நான்தான் தலைமைச் செயலகத்திற்கு வந்திருக்கிறேன் என்று பார்த்தால், எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரும் இங்கு வந்திருக்கிறார். ஆசிரியர் என்றால், இப்படியிருக்க வேண்டும்’ என்று என்னைப் பற்றிப் புகழ்ந்து சொன்னார்.

Add a Comment