POST: 2017-06-27T10:52:25+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-69
————-

காளிமுத்துவின் பிள்ளைகளில் ஒருவர் வெளியே ஒடிவந்து, “ஐயா! வாருங்கள் உங்கள் மாணவனைப் பார்க்க வாருங்கள்’ என்று கலங்கி, ஒலமிட்டபடி என்னை அழைத்துப் போனார்.

நான் உள்ளே போனவுடன், காளிமுத்துவின் துணைவியார் என்னைப் பார்த்துக் கதறினார். அப்போது என்ன சொன்னார் என்பது மேலும் உருக்கத்திற்கு உரியது. ‘யார் வந்திருக்கிறார் என்று பாருங்கள். என் ஆசிரியர் என்று சொல்லி, நாள்தோறும் மனம் மகிழ்வீர்களே எவ்வளவு பெரிய இடத்திலும், அவர் வருகிறார் என்றால் எழுந்து வணங்குவீர்களே! இப்போது அவர் வந்திருக்கிறார். கால்நீட்டிப் படுத்திருக்கிறீர்களே! எழுந்திருங்களேன்’ என்று அவருடைய துணைவியார், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார்.

அது என்னை அவலத்தின் ஆழத்திற்குக் கொண்டு சென்றது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *