மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-70
————-
செந்தமிழ்ச் செல்வி நூலில் அவரைப்பற்றி வந்திருந்த செய்தி :
==================================================
“தமிழக முன்னாள் அமைச்சர் மாண்பமை திரு.காளிமுத்து அவர்கள் மறைமலையடிகள் நூலகத்துக்கு அன்போடு அளித்த நூல்கள் 1015ம் நன்றியோடு பெற்றுக் கொண்டோம். ஏறத்தாழ உரூபா 6589 விலைமதிப்புடைய நூல்களை மனமுவந்து அளித்த அமைச்சர் அவர்களுடைய, வள்ளல் தன்மையைப் பாராட்டி மகிழ்கிறோம். அவர்களின் புகழ் வாழ்க!.”
கல்வியின் மீது அவருக்கிருந்த ஆர்வமும், அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற தீராத தாகமும் மிகுந்த பெருமிதம் தருவதாகும்.

Add a Comment