மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-76
————-
உங்களுக்கெல்லாம் நன்றாக நினைவிருக்கும்.
என்னை முதன்முதலாக உவமைக் கவிஞர் சுரதாதான் புரட்சித்தலைவரிடம்
அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார் என்று சொன்னேன் அல்லவா?
அந்த உவமைக் கவிஞரின் “அமுதும் தேனும்” கவிதை தொகுப்பில் இடம்பெற்ற “அசோகர் சக்கரவர்த்தி” தொடர்பான இப்பாடலையும் நான் கூற, என் மாணவர் காளிமுத்து திருப்பிச் சொல்வார்.
அந்த கவிதை ….
ஆராய்ச்சி மணி
===============
தேரில்நான் இருந்தாலும்; குயில்கள் கூவும்
சிங்காரச் சோலைதனில் உலவி னாலும்
போரில் இன்பநிலை காணும் அந்தப்
புரத்தில்நான் இருந்தாலும்; நாட்டு மக்கள்
நேரில்வந் தென்னிடத்தில் தங்கள் தங்கள்
நிலைமைதனைக் கூறிடலாம்! நீதி என்னும்
வேரில்நீர் ஊற்றுவதே எனக்கு வேலை!
வேந்தனுக்கு குடிமக்கள் குரலே வேதம் !
பொதுமக்கள் நலமெனக்குப் பெரிதே யன்றிப்
புகழெனக்கு பெரிதன்று; நாட்டுக் காக
நிதிவைத்தல் பெரிதன்று; தடுமா றாத
நீதிவைத்துக் காப்பதுவே கடின மாகும்.
விதிசெய்ய வந்தேன்யான்; எனினும் தூக்கி
வினைசெய்ய நன்மைசெய்யத் தவற மாட்டேன்.
மதிவைத்த வானத்தின் கீழி ருக்கும்
மக்களையென் கண்ணுக்குள் வைத்துக் காப்பேன்!
—- அசோகன் (ஆறாவது கல்வெட்டு)

Add a Comment