POST: 2017-07-13T13:21:26+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-78
————-

சங்க இலக்கியத்தின் நல்லிசைப் புலவர்களுள் நாயகமாகத் திகழ்ந்த கபிலர் பெருமான் பாடிய குறிஞ்சிப்பாட்டு வரலாற்றுச் சிறப்பும் செய்யுள் வனப்பும் வாயந்தனவாகும்.

தொண்ணூற்று ஒன்பது பூக்களை, அடுக்கிப் பாடிய அவர் திறத்தை முன்னாள் அமைச்சர் டாக்டர்.காளிமுத்து, வாய் திறந்து வெள்ளம்போல் எடுத்துரைப்பதை கேட்டுப் புரட்சித்தலைவர் வெதுவெதுத்தார்.

குறிஞ்சிப்பாட்டு பூக்கள் – 99
—————————————————

1. அதிரல்
2. அரும்பு
3. அவரை
4. அனிச்சம்
5. ஆத்தி
6. ஆம்பல்
7. ஆரம்
8. ஆவிரை
9. இலவம்
10. ஈங்கை
11. உந்தூழ்
12. எருவை
13. எறுழம்
14. கஞ்சங்குல்லை
15. கரந்தை
16. கருங்குவளை
17. கருவிளம்
18. காஞ்சி
19. காந்தள்
20. காயா
21. காழ்வை
22. குன்றி
23. குரவம்
24. குறிஞ்சி
25. குவளை
26. குருந்தம்
27. குருக்கத்தி
28. குருகிலை
29. குருநருங்கண்ணி
30. குடசம்
31. குளவி
32. கூவிரம்
33. கூவிளம்
34. கைதை
35. கொகுடி
36. கொன்றை
37. கோங்கம்
38. கோடல்
39. கோரைப்பூ
40. ஞாழல்
41. சண்பகம்
42. சிறுசெங்குரலி
43. சிந்துவாரம்
44. சிறுபூவைப்பூ
45. சிறுமூங்கில் பூ
46. செங்கருங்கண்ணி
47. செருவிளை
48. செங்கொடுவெரி
49. செருந்தி
50. சுள்ளி
51. சூரல்
52. செம்மல்
53. செய்ல்
54. தளவம்
55. தணக்கம்
56. தாழை
57. தாமரை
58. திலகம்
59. தில்லை
60. தேமா
61. தும்பை
62. துழாய்
63. தோன்றி
64. நறவம்
65. நரத்தம்
66. நாகப்பூ
67. நெய்தல்
68. நள்ளிருனாரி
69. பகன்றை
70. பசும்பிடி
71. பயினி
72. பலாசம்
73. பாலை
74. பாங்கர்
75. பாரம்,
76. பாதிரி
77. பிண்டி
78. பித்திகம்
79. புன்னாகம்
80. புழகு
81. பிடவம்
82. பீரம்
83. போங்கம்
84. புன்னை
85. மணிச்சிகை
86. மராவும்
87. மருதம்
88. மா
89. முல்லை
90. மௌவ்வல்
91. வஞ்சி
92. வள்ளி
93. வழை
94. வாழை
95. வானி
96. வாகை
97. வெட்சி
98. வேரல்
99. வேங்கை

குறிஞ்சிப்பாட்டு, அவருக்கு புகழ்முடி அளித்தது. புரட்சித்தலைவரின் போற்றுதல் நிலைத்தது. அவர், இந்த பாடலைக் கேட்ட பிறகு என்னைப் பார்த்து திரும்பி “பூக்களை வரிசையாகச் சொல்லும் வரிகள் வேறெங்கும் உண்டா?” என்று திடுமெனக் கேட்டார்.

அதற்கு நான், “இறையனார் களவியல் நூலில்
ஒரு பூம்பொழிலின் அழகை இப்படி ஐம்பதுக்கு மேற்பட்ட பூக்களின் பெயர்களையும் இடம்பெறுவது உண்டு. எனக்கு நினைவில் இல்லை, அதனால் என் மாணவருக்கு நான் அதை சொல்லித் தரவில்லை” என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும்,
புரட்சித்தலைவர், “அந்த பாடல் தொடரை நீங்கள் இப்பொழுது சொல்லுங்கள்” என்றார். அந்த பாடல் தொடர்…. உடனே சொன்னேன்…

சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும்
ஆசினியும் அசோகும் நறவும்
நந்தியும் மாதவியும் மல்லிகையும்
மௌவலோடு மணங்கமழ்ந்து
பாதிரியும் பாவை ஞாழலும்
பைங்கொன்றையும் பிணியவிழ்ந்து
பொரிபுன்கும் புன்நாகமும்
முருக்கொடு முகைதிறந்து
வண்டரைந்து தேனார்ந்து
வரிக்குயில்கள் இசைபாட
தண்தென்றல் இடைவிடாத்
தனியவரை முனிவு செய்யும் பொழில்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *