POST: 2017-07-30T10:28:06+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-XIV)
———-

இந்நேரத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்புப் பேருரையில் கூறிய வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது.

மேதகு பணியினைச் செய்திடத்தான் நீவிரெல்லாம் பட்டத் தகுதிப்பேறு பெற்றுச்செல்கின்றீர் என்பதனை மறவாதீர்! அழியாப் புகழ் படைத்த அறிவாலயத்தின் பெருந்திறனும் பேருணர்வும் உமக்குப் பெருந்துணை புரிந்திடும் என்பது உறுதி! எதையும் வெற்றியாக்கும் பேருறுதி நிச்சயம் உம்மிடம் உள்ளது. வாழ்வினைத் தொடங்கிடுங்கள், வாழ்வுக்களம் நோக்கிச் சென்றிடுவீர், வென்றிடுவீர்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *