தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2017ம் ஆண்டின் வரவு-செலவு (பட்ஜெட்) கூட்டத்தொடரில், 14.07.2017 அன்று இடம்பெற்ற மொழிபெயர்ப்புத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு
===============================================
மொழிபெயர்ப்புத் துறை
=======================
நோக்கம் :
—————
நிலைமொழியிலுள்ள எந்தவொரு செய்தியையும் பொருண்மையையும் வருமொழியில் புத்துயிர்ப்புடன் ஆக்கம் செய்யும் அரிய கலையே மொழிபெயர்ப்பாகும். மொழிபெயர்ப்பு இல்லையெனில் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்குரிய மொழி ஏதுமின்றி மோன உலகில்தான் நாம் முடங்கிப்போய் இருந்திருப்போம். மொழிபெயர்ப்பு அறிவு சார்ந்த பயிற்சி மட்டுமன்று, அது ஒர் அருங்கலையாகவும் அமைகிறது.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பற்றிப் பொதுமக்கள் தகவல்களைத் தெளிவாக அறிந்து அவற்றின் பயன்களை முழுமையாகப் பெறுவதற்கு ஏற்ற வகையில், அவை தொடர்பானவற்றை அந்தந்தத்துறைகளுக்கு மொழிபெயர்த்துத் தருதல் இத்துறையின் முதன்மையான பணியாகும்.
இதனைக் கருத்திற்கொண்டு, தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்புத்துறை மொழியாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
செயற்பாடு :
——————–
• மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்
அறிவிப்புகள்
• மாண்பமை அமைச்சரவைக் கூட்டக்
குறிப்புகள்
• அரசிதழில் வெளியிடப்படும் அறிவிக்கைகள்
• சுற்றாணைக் குறிப்புகள்
• விசாரணை ஆணைய அறிக்கைகள்
• தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின்
ஆண்டறிக்கைகள்
• மாநில மனித உரிமை ஆணைய அறிக்கைகள்
• ‘காபிபோசா ஆவணங்கள்
• அரசாணைகள்
• சுற்றறிக்கைகள்
• காவலர் பதக்கங்களுக்கான தகுதியுரைகள்
• தேர்தல் கையேடு
• கொள்கை விளக்கக் குறிப்புகள்
• பொதுக் கணக்குக் குழு அறிக்கைகள்
• பொது நிறுவனங்கள் குழு அறிக்கைகள்
கட்டமைப்பு :
———————
மொழிபெயர்ப்புப் பணிகளை மேலும் சீராக்குதற்கு உரிய வகையில் மாண்புமிகு துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு இசையப் பதினாறு உதவிப் பிரிவு அலுவலர்களின் பணி மேலும் சிறக்க, அவரவர்க்குத் தனிக் கணினிகளுடன் அறையணிகள் வழங்கப்பட்டுள்ளன.
“மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்” என்ற தொல்காப்பிய மூதுரை கிணங்க இத்துறையால் மேற்கொள்ளப்படும் மொழியாக்கப் பணிகள் விழுமிய பயன் விளைவிப்பனவாகும்.

Add a Comment