POST: 2017-09-12T09:35:30+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-83
————-

புரட்சித்தலைவர், அப்போது கேட்டார், “நான் நாள் தவறாமல் தாங்கள் சொல்லி வருகின்ற திருவெம்பாவையை கேட்டு வருகிறேன். திருவாசகம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது.

நீங்கள், வாரத்திற்கு ஒருமுறை என்னோடு பயணம் செய்துகொண்டே திருவாசகத்தின் பொருளை சொல்லுங்கள்” என்று சொன்னார்.

அதற்கு, “சிவன்தான் திருவாசகத்தை கேட்டதாகச் சொல்வார்கள். அண்ணன்தான் எங்களுக்கு அந்த வடிவத்தில் இருக்கிறார்” என்று ஜெகத்ரட்சகன் சொன்னார்.

“உனக்கு என்ன நீ எப்போதும் ஔவையோடு இருக்கிறாய். உனக்கு அத்தனையும் மனப்பாடம்” என்று புரட்சித்தைலைவர் பதிலுரை சொன்னார்.

அதைக்கேட்டபோது, நாடோடி மன்னன் பாடல் வரி ஒன்று நினைவுக்கு வந்தது.

“முன்னேற்றம் இவனது உயிராகும்
முத்தமிழ் இவன் நாவில் பயிராகும்”

என்று சுரதா எழுதிய வரிகள் அவை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *