மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-88
————-
=====================
காவியக் கவிஞர் வாலி
=====================
ஒருமுறை வாலி அவர்கள் பெரியபுள்ளிகள் என்றொரு நூலை எழுதினார். அந்நூலில் என்னைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதைப்படித்து நாம் மிகவும் நெகிழ்தேன். அந்த கவிதை உங்கள் பார்வைக்கு….
தமிழ் உட்கார.
தன்
நாக்கையே நாற்காலியாகக் கொடுத்தவன் இவன்!
இவன் விரல் நுனியில்
இலக்கணம் இருக்கிறது; குரல் நுனியில்
இலக்கியம் இருக்கிறது;
இவன்
அவ்வையாக இருப்பதால் தான்……
மாட்டுக்கார வேலனின்
சந்நிதானத்தில்
சேவை செய்து கொண்டிருக்கிறான்!
வளரும் கவிஞர்களுக்கு இவன்
தாய்ப்பால்
போன்றவன்;
இன்றைய கவிஞர்களுக்கு இவன்தான்
ரசிகமணி டி. கே. சி.
மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும்
மணம் உண்டு என்று
இவன் மதிப்பதால்.
இவன்
இன்னொரு அண்ணா ஆகிறான்!
ஆம் இவன்அண்ணா நகரில் குடியிருக்கும் அண்ணா!

Add a Comment