மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-91
————-
=====================
காவியக் கவிஞர் வாலி
=====================
கவிஞர் வாலி மனத்தில் பட்டதை மறக்காமல் சொல்லக்கூடியவர். ஒருமுறை அவருடைய முகத்தில் விபூதியும் குங்குமக்கோட்டையும் பார்த்து, நீங்கள் இதைத் துடைத்துக்கொண்டால் என்ன என்று புரட்சித் தலைவர் கேட்டாராம்.
கட்சியில் இருப்பவர்கள், கட்சியுணர்வோடு உள்ளவர்களை உங்கள் படத்திற்கு பாடல்களை எழுத வைக்காமல் பக்திமான்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்களே என்று என்னை கேட்கிறார்கள். என்று சொன்னாராம்.
அதற்கென்ன சரி அண்ணா என்று சொல்லிவிட்டு, மறுநாளில் இருந்து அந்த விபூதி குங்குமத்தை இன்னும் பளிச்சிடுமாறு இட்டுக்கொண்டார் வாலி. புரட்சித்தலைவரும் அதைப்பற்றி ஒன்றும் பேசடிவில்லை.
புரட்சித்தலைவருக்கு தான் தெய்வத்தாய் படத்திற்கு எழுதிய
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் தேவன்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் தேவன்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
என்ற பாடல் அவரையும் அவரது இயக்கத்தையும் நினைத்து எழுதியவை அல்ல என்றார்.
ஆனால், காலத்தில் விளைந்த கனியாகவும், கட்சி சூழலுக்கு உகந்த வைரங்களாகவும் அந்த பாடல் அமைந்தது என்பதை பெருமிதமாகச் சொன்னார்.

Add a Comment