மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-94
————-
=====================
காவியக் கவிஞர் வாலி
=====================
கவியரசர் வாலிக்கு நகைச்சுவை இயல்பாக வரும்.
ஏறத்தாழ கண்ணதாசனைப் போலவே திரை வதந்திகளுக்கு இவருடைய நகைச்சுவை துணுக்குகள் பெரிய தித்திப்பை ஊட்டுவன.
நானும் வைரமுத்துவும் மோதுகிறோம் மோதுகிறோம் என்கிறார்கள். அது உண்மையில்லை.
வைரமுத்து எனக்கு மோதிரம் போட்டதன் மூலம் மோதுதல் இருந்தால் மோதிரம் கிடைக்கும் என்று நகைச்சுவையாக சொன்னார்.
மழை தூறல் இருந்தபோதும், வாலியின் இறுதி ஊர்வலத்திற்கு நெடுந்தொலைவு வாயில் ஏதோ முணுமுணுத்தபடியே வைரமுத்து நடந்து வந்தது ஒரு கவியரசருக்கு செய்த கவிதை வணக்கமாக இருந்தது.

Add a Comment