POST: 2017-10-01T10:11:53+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-96
————-
=====================
புத்தனேரி சுப்பிரமணியம்
=====================
நெல்லையில் இளம் சங்க இலக்கியப் புலமையோடும் சான்றாண்மையோடும் வளர்ந்த பெருந்தகைதான் பொதுப்பணித்துறையின் ஆட்சி மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம்.

புத்தனேரியார், அறுபதாண்டுகளுக்கு முன்னரே செந்தமிழ்ச் செல்வி இதழில் தென்னாட்டு வீரன் என்ற நெடுங்கதை எழுதியவர்.

பொன்னியின் செல்வன் பிறக்காத காலத்தில், இந்தச் செந்தமிழ் வரலாற்று கதையை எழுதியவர் புத்தனேரியார்.

அன்பும் பண்பும் நட்பும் பணிவும் பூண்ட புத்தனேரியார் இயலிசைப் புலமையோடு கலைத்துறையிலும் நாடகம் நாட்டிய நாடகம் கதை வடிவம் முதலிய துறைகளில் வல்லவராக விளங்கினார்.

நடிப்புக் கலை வித்தகர்களாகிய டி.கே.எஸ். தோழர்களோடு உடன் இருந்து பல கலைப் பணிகளை ஆற்றியவர்.
புரட்சித்தலைவருக்கு அவர் நட்பு பூண்டது, அவருடைய திறமையால் கிடைத்த பரிசாகும்.
காவிரித் தந்த கலைச்செல்வி என்ற நாட்டிய நாடகத்தை எழுதி இயக்கியவர் புத்தனேரியார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *