POST: 2017-10-02T08:59:08+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-97
————-
====================================
கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம்
====================================

நான், தலைமைச் செயலகத்தில் இருந்தபோது கடற்கரை சாலையில் செல்லும்போது பொதுப்பணித்துறையில் அலுவலகத்தில் பெரியதொரு அறையில் அவர் அமர்ந்து பணிகள் ஆற்றுவதை நான் கண்டு பலமுறை உரையாடியிருக்கிறேன்.

புரட்சித்தலைவரோடு பலமுறை தோட்டத்து இல்லத்தில் நான் அவரைக் கண்டிருக்கிறேன்.
கடையெழு வள்ளல்களின் ஒரு வள்ளலைப் பற்றிய திரைக்கதை எழுத வேண்டும்,
புத்தனேரியாரால்தான் அதைச் செய்ய முடியும் என்று புகழ்ந்து சொன்னார் புரட்சித்தலைவர்.

புரட்சித்தலைவரைத் தெரிந்ததுபோல, புரட்சித்தலைவி அவர்களையும் நன்கு அறிந்தவர். அவரோடு இலக்கியக் கலந்துரையாடல்களிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

நான் அண்ணன் என்று மதிப்போடு அழைத்து வந்த புத்தனேரியாருக்கு, கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் என்ற பொறுப்பை அளித்துத் தலைமைச் செயலகத்தில் புரட்சித்தலைவர் தம் ஆணையால் அமர வைத்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *