பொள்ளாச்சிக்குப் புகழ் சேர்த்த
=================================
பொன்விளக்கு
===============
பொள்ளாச்சி வள்ளலாகவும்
கோவை கோமானாகவும் திகழ்ந்த சன்மார்க்கத் திலகம்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் துணைவியாராகவும் சன்மார்க்கத் திருக்கூட்டத்தின் அன்னையாராகவும் தோளில் சுமந்த பெருங்குடும்பத்தின்
பெருமிதத்தை எல்லா வகையிலும் காத்து வளர்த்த அன்னையார் தன் வாழ்நாளில் இறுதி மூச்சுவரை தம் அருமை கணவர் காட்டிய வழியில் இருந்து அணுவளவும் தடுமாறியது இல்லை.
தம்மைச் சுற்றியே அவரின் நல்லுயிர் தம் எதிரிலேயே தங்கி இருக்கிறது என்ற நம்பிக்கை தழுதழுக்கத் தன் கடைசி நாட்களைக் கடமை உணர்ச்சியிலும் வழிபாட்டு நினைவிலும் செலுத்தி வாழ்ந்த ஒருமாமணியாய் பிறந்து ஓங்கிய திருமாமணியாக வாழ்ந்து மறைந்தார்.
பணிவாலும் கனிவாலும் மேற்கொண்ட பணிகளின் செம்மையாலும் தாம் செயல்களை ஆற்றி வந்த மனத்திட்பமும் வினைத்திட்பமும் வேறு எவர்பாலும் காணவியலாது.
அன்னையாரின் மறைவு, உடலளவில் நம் கண்முன் இல்லையென்றாலும் அவரின் வாழ்த்துதலினால் நன்மக்கள், மருகர், மருகியர், பேரன் பேத்திகள் பணியாளர்கள் தொண்டர்கள் எனப் பரந்துபட்ட பெருங்குடும்பத்திற்கு எந்நாளும் மனவுறுதியை ஊட்டும் என்பதே எங்கள் உறுதி.
அருட்பெரும்ஜோதி! தனிப்பெருங் கருணை!
—– ஒளவை நடராசன்

Add a Comment