மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-100
————-
====================================
கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம்
====================================
சங்க இலக்கியப் புலமையோடு குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள்ளு முதலிய நூல்களின் நலங்களை எடுத்துக்கூறி, அந்தச் சந்த அமைப்பிலேயே கவிதைகளை எழுதினார்.
ஆயிரம் நூல்களைக் கொண்ட அவருடைய நூலகத்தை நான் கண்டிருக்கிறேன்.
அவருடைய மறைவுக்குப் பிறகு, அவர் குடும்பத்தார் பெருமிதத்தோடு நூற்றுக் கணக்கான நூல்களை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்காக என் வழியாக வழங்கினார்கள்.
என்னைக் கனிந்த மனத்தோடு தம்பி என்றழைத்த அந்தத் தமிழ் நம்பியை நான் நினைவுகூர்வது என் கடமையாகும்.
புத்தனேரியார் கட்டுரைகளைத் தொகுப்பதும் தென்னாட்டு வீரன் நெடுங்கதையைப் படிப்பதும் தமிழுலகம் செய்ய வேண்டிய பதிப்புப் பணியாகும்.
ஆரவாரமில்லாமல் அமைதி தெளிக்க வாழ்ந்த சிறப்பு குறிக்கத்தக்கது.

Add a Comment