POST: 2017-10-16T14:50:53+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-105
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================

புரட்சித்தலைவர் தன் மனம் போன போக்கில், சில நேரங்களில் பிறர் பேச்சைக் கேட்டுக்கொண்டு மனம் கசந்து போவார். அப்படி பல நிகழ்வுகள் திரையுலகிலும் அரசியலிலும் நேர்ந்ததுண்டு. கவியரசர் கண்ணதாசனோடு அப்படி கசந்த நிகழ்வுகள் பல என்றாலும், ஒருமுறை ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கடலில் கப்பலில் இருந்தபடி ஒரு இனிமையான பாடல் அமைய வேண்டும் என்று எவர் எவரையோ எழுத வைத்து முயன்று, கவியரசர்தான் இந்த காட்சிக்கு பாடல் எழுத முடியும் என்று சொல்லி, நானே அவரை அழைக்கிறேன் என்று அழைத்து வெற்றி மணக்க விளங்கிய அந்த பாடல்தான்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *