POST: 2017-10-17T17:32:58+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-106
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
பட்டுக்கோட்டை, கவியரசர் கண்ணதாசன், புலமைப்பித்தன், வாலி முதலியோர் தாமாகவே பாடல்களை அந்தந்த சூழலுக்கு சுயமரியாதை கருத்துகளை சுடர்விட எழுதினார்கள் என்றாலும், கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்தான் புரட்சித்தலைவருடைய உருவக் குறியையும் வலுவையும் உணர்வையும் எல்லோருடைய மனத்திலும் நிலைத்து நிற்கும் படிமச் சிலையாக படர்ந்து நின்று காட்டியது.

சான்றாக, குடும்பத்தலைவன் படத்தில் இடம்பெற்ற பாடல் உங்கள் பார்வைக்கு…..

கட்டான கட்டழகுக் கண்ணா –
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா –
உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா

நடை போடு.. நீ நடைபோடு
நடைபோடு நடைபோடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே –
உன்இடையோடு இடையோடு
கொடி போல உள்ளம்
விளையாட வந்த நிலவே..
விளையாடு நீ விளையாடு..
விளையாடு விளையாடு
விடிகின்ற வரையில்அழகோடு வந்த துணையே –
பொன்வளையோடு வளையோடு
இசைபாடும் கையில்வளைந்தாட வந்த கலையே
(கட்டான)

பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா –
சிறுநூலென்ற இடையிலே
கால்பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா –
காதல்நோய் தந்த பெண்மையே வா

மதயானை வடிவமே நடமாடும்
வீரனேமலர் போன்ற உள்ளமே வா –
நாம்அறியாத பூமியில்
தெரியாத பாதையில்இரு பேரும் போகலாம் வா –
நாம்இரு பேரும் போகலாம் வா
(கட்டான)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *