மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-108
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
பாகவதரைப் பற்றி புரட்சித்தலைவர் கூறியது….
ஒருமுறை அசோக்குமார் படத்தில் நான் பாகவதரோடு நடிக்கப் பேயாய் அலைந்தேன்.
ஒருநாள் விடாமல் பாகவதர் இல்லத்தில் பித்தன்போல் சுற்றிச் சுற்றி வந்தேன்.
காத்திருந்த என்னைக் காண விடாமல் பாகவதரை விட அவர் மனைவிதான் தடுத்துக்கொண்டிருந்தார்.
காலம் எப்படிக் கவிழ்ந்து காட்சிகளை மாற்றிவிடுகிறது என்பதற்காகச் சொல்ல வருகிறேன்.
நானாக நினைத்துச் செய்ததில்லை. பாகவதரின் காலம் முடிந்து அவருடைய குடும்பம் நிலைகுலைந்து எல்லாம் சீரழிந்த நிலையில், பாகவதரின் துணைவியார் முதலமைச்சராக இருந்த என்னை நிதியுதவி கேட்டுக் காண வந்திருந்தார்.
வந்த அவருக்கு நான், ஏதோ ஒரு தொகை தந்தேன் என்று சொன்னதும் பின்னால் அது ஒரு இலட்சம் ரூபாய் என்று நான் அறிந்து கொண்டேன்.
அவர் சொல்ல வந்தது, பாகவதரின் துணைவியார் என்னைப் பார்க்க வந்து இரண்டு நாட்களாகக் காத்திருக்கிறார் என்று சொன்ன சொல், சுருக்கென்று என்னைத் தைத்தாலும் நான் அவர் இல்லத்தில் காத்திருந்து காத்திருந்து கால் விரல்கள் தேய்ந்த நாள்கள் நினைவுக்கு வந்தன.
இந்தக் கருத்தைக் கவியரசர் கண்ணதாசன் பாகவதர் இல்லத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது இதைக் குறிப்பிட்டார்.

Add a Comment