POST: 2017-10-21T18:50:00+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-110
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================

பாடல்களே புரட்சித்தலைவரை
படம்பிடித்துக் காட்டுகின்றன என்றாலும்கூட, நறுக்குத்தெரித்தாற்போல் கவியரசர் எழுதிய நல்ல வசனங்கள் புரட்சித்தலைவரின்
புகழுக்கு பொன்னொளி சேர்த்தன. சான்றாக,
நாடோடிமன்னன் படத்தில்….

வீராங்கன் : மாட்சிமை தாங்கிய குருநாதர் அவர்களே, பெரியோர்களே, பொது மக்களே! நமது நாட்டில் நலம் பெருக, சில புதிய சட்டங்களை அவசரமாக நிறைவேற்றி உடனடியாக அமுலுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தப் புதிய சட்டங்களை நமது அமைச்சரும் தளபதியும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றனர். அவைகளைப் படிக்கச் சொல்லுகிறேன். உங்கள் விருப்பையோ, வெறுப்பையோ பயமின்றித் தெரிவிக்கலாம்…. (மந்திரியிடம்)…. ம்…. படியுங்கள்.

மந்திரி : (படிக்கிறார்) உழுபவருக்கே நிலம் உரிமையாக்கப்படுகிறது. உரிமைக்காரருக்கு நஷ்ட ஈடு நிலத்தின் வருமானத்தில் கால் பங்கு.

பிங்: என்ன அநியாயம்?

மந்திரி : விளைச்சல் காலத்தில் நிலவரி ஆறில் ஒரு பங்கு. இரண்டாண்டுகள் தொடர்ந்து விளையாமல் போனால் குடும்பத்திற்கு தலைக்கு ஏற்ற மானியம் வழங்கப்படும்.

மந்திரி : பெரிய மாளிகைகளில் சிறிய எண்ணிக்கையுள்ள குடும்பங்கள் வாழ்வது கூடாது. ஒரு பகுதி அவர்களுக்குப் போக மீதி வைத்திருப்பதில் குடிசையில் வாழ்பவரைக் கொண்டு வந்து வைக்கப்படும்.

கார்மேகம் : (கிண்டலாக) குடிசைகளை என்ன
செய்வது?

வீராங்கன் : தேவை இல்லாததினால் குடிசைகள் கொளுத்தப்படும். தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பத்து சதவீதமும் மற்றுள்ளதை தொழிலாளர்களுக்கும் பிரித்துத் தரப்பட வேண்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *